வட கொரியாவில் சிறைதண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த அமெரிக்க இளைஞர் கோமா நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வடகொரியாவுக்கு கடந்த 2016ம் ஆண்டு ஒட்டோ வார்ம்பியர் என்ற இளைஞர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார்.
அப்போது விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர் அந்நாட்டின் பிரச்சார பதாகையை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு, அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார், உடனடியாக அவரை ராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான குற்றம் எனக்கூறி ஒட்டோவுக்கு 15 ஆண்டுகள் கடினமான வேலைகளை செய்யும் கடுங்காவல் தண்டனை அளித்து உத்தரவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து சிறையில் கடின வேலைகள் செய்யும்படி சித்ரவதை செய்யப்பட்ட இளைஞர் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றார்.
இந்நிலையில் 17 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்த ஒட்டோவை வடகொரியா தற்போது விடுதலை செய்துள்ளது.
தன் மகனுக்கு நேர்ந்ததை இந்த உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும், இதுபோல வேறு யாருக்கும் நிகழக்கூடாது எனவும் ஒட்டோவின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.