சீனாவில் மிக நீளமான பாலம் ஒன்று வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டதன் காணொளியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் சங்சுன் நதியின் குறுக்கே கடந்த 1978ஆம் ஆண்டு 150மீற்றர் நீளமும், 26மீற்றர் அகலமும் கொண்ட நன்ஹு என்ற மிக நீளமான பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
39 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலம் பழுதடைந்ததால் சில ஆண்டுகளாக போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் மற்றொரு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த பழைய பாலத்தை சுமார் 700 கிலோ வெடிபொருட்களை பயன்படுத்தி 4 நொடிகளில் தகர்த்துள்ளனர். இதனால், தூசி மற்றும் புகைமண்டலம் அப்பகுதியை சூழ்ந்துள்ளது.