ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவு எவ்வளவு தெரியுமா?

187

ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவை அ.தி.மு.க. அம்மா அணியே ஏற்கும் என்று செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கமளித்திருந்தனர்.

ஆனால், சிகிச்சைக்கான செலவுத் தொகை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இந்தச் சூழ்நிலையில் ஜெயலலிதாவுக்கான சிகிச்சைத் தொகையை அ.தி.மு.க.அம்மா அணியே ஏற்கும் என்று செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ செலவுக்கான தொகையை எங்கள் கட்சி நிதியில் இருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஆறு கோடி ரூபா காசோலையை வழங்குகிறோம்.

இந்த காசோலையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர், விரைவில் அந்த காசோலையை அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கொடுக்கவுள்ளார் என்றார்.

SHARE