காதலை ஏற்க மறுத்த நடிகை?.. தற்கொலைக்கு முயன்ற நடிகர்

204

நடிகர் ஹூச்சா வெங்கட் தற்கொலைக்கு முயன்றது குறித்து நடிகை ரச்சனா விளக்கம் அளித்துள்ளார்.

கன்னட நடிகர் ஹூச்சா வெங்கட் நடிகை ரச்சனா தனது காதலை ஏற்க மறுத்ததால் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரச்சனா செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,

காதல்

நான் வெங்கட்டை காதலிக்கவே இல்லை. அவர் தற்கொலைக்கு முயன்றதற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும் அனைவரையும் என்னை குறை கூறுகிறார்கள்.

திருமணம்

வெங்கட் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு என்னை வலியுறுத்தி வந்தார். நான் முடியாது என்றேன். டிவி நிகழ்ச்சியில் சேர்ந்து பங்கேற்றோம் அதை தவிர எங்களுக்கு இடையே எதுவும் இல்லை.

சூப்பர் ஜோடி 2

சூப்பர் ஜோடி 2 நிகழ்ச்சி துவங்கியபோது வெங்கட் ஒழுங்காக இருந்தார். அதன் பிறகு அவருக்கு என்னை பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன். வெங்கட் பெண்களை மதிப்பவர். அதனால் தான் அவருடன் சேர்ந்து நடித்தேன் என்றார் ரச்சனா.

வெங்கட்

வெங்கட் தற்கொலைக்கு முயற்சி செய்வதற்கு முன்பு ரச்சனாவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். ரச்சனா அப்பொழுதும் காதலை ஏற்க மறுக்கவே அவர் பினாயிலை குடித்துவிட்டார்.

– See more at: http://www.manithan.com/news/20170619127814#sthash.ZJ92bLta.dpuf

SHARE