காலைக்கடன் கழிக்க சென்ற பெண்களை..! அதிகாரிகள் செய்த அட்டூழியம்!

199

ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கார் என்ற நகராட்சி பகுதி தூய்மையான பகுதியாக அறிவிக்கப்பட்டது. இங்கு திறந்த வெளியில் காலைக் கடன் கழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கழிவறைகளை பயன்படுத்தும்படியும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஒரு சிலர் திறந்தவெளியில் மலம் கழிப்பதையே வழக்கமாக கொண்டிருந்தனர்.

திறந்த வெளியில் மலம் கழிப்பதை கண்காணிக்கும் பணியை நகராட்சி அதிகாரிகள் செய்து வந்தனர். மேலும் அதிகாரிகள் காலை, மாலை நேரங்களில் ரோந்து வந்துள்ளனர்.

மேலும் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களை படம் பிடிப்பார்கள். இதற்கு பயந்தாவது அவர்கள் திறந்த வெளியை பயன்படுத்த மாட்டார்கள் என நம்பினர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை சில பெண்கள் திறந்த வெளியில் மலம் கழித்தனர். அப்போது அங்கு வந்த நகராட்சி ஆணையர் மற்றும் 4 அதிகாரிகள் அந்த பெண்களை படம் எடுத்தனர்.

இதை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த முதியவர் ஷபார்கான் (55) என்பவர் அதிகாரிகள் படம் பிடித்ததை தடுத்து நிறுத்தி, வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் அந்த முதியவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதையடுத்து அந்த முதியவரின் சகோதரர் நூர்முகமது போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் மற்றும் 4 அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை.

SHARE