பிரஸ்ஸல்ஸ் பகுதியில் தீவிரவாத தாக்குதல்? ரயில் நிலையத்தில் இராணுவம் குவிப்பு

207

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் சிறு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வெடிபொருள் பெட்டியை அணிந்து சென்ற நபரை பொலிஸார் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேவேளை, பட்டியை அணிந்து சென்றவர் சுடப்பட்டார் என சில ஜரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

சம்பவத்தை தொடர்ந்து பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து பயனிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், அந்தப் பகுதியை பூரண கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும், இணையத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில் குறித்த ரயில் நிலையத்தில் தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறுவது போன்ற காட்சி ஒன்று வைரலாகியுள்ளது.

SHARE