விஜய்யின் இந்த ஒரு வளர்ச்சிக்கும், புகழுக்கும் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு வகையில் வழிகாட்டியாக இருந்துள்ளார். தான் இயக்கிய படத்தின் மூலம் மகனை அறிமுகப்படுத்தி இன்று ஸ்டார் ரேஞ்ச்சுக்கு உயர்த்தியுள்ளார்.
வருகிற 22ம் திகதி விஜய் தன்னுடைய 43வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இதனையொட்டி இளையதளபதி ரசிகர்கள் தமிழகம் முழுவதும் நலத்திட்ட விழாக்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
அவ்வாறு நிகழ்த்தப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சாந்தனு இளையதளபதி விஜய்யினைப் பற்றி பல விடயங்களை மேடையில் பகிர்ந்துள்ளார்.
மற்றொரு புறம் விஜய் ரசிகர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஒரு கானா பாடலை அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளார்கள்.
– See more at: http://www.manithan.com/news/20170620127840#sthash.e9bhe6O7.dpuf