அம்மா மற்றும் மகள் என்ற உறவு மிகவும் புனிதமானது. ஆனால் நட்பாக இருக்கும் இந்த உறவில் கூட சில தடுமாற்றங்கள் ஏற்படலாம்.
எதிர்பார்ப்புகள் என்பது அம்மா மற்றும் மகளிடம் மட்டுமல்ல அனைவரிடமும் இருக்கக் கூடிய இயல்பான குணங்கள் தான்.
தனது மகளை வருத்தத்திற்கு உள்ளாக்கும் ஒருசில விடயங்களை அம்மா தனது குழந்தைகளிடம் கூறக்கூடாது.
மகளிடம் அம்மா கூறக்கூடாத விடயங்கள் என்ன?
- அம்மா அழகாகவும், அவர்களின் மகள் அவர்களை விட அழகில் குறைவாகவும் இருந்தால், அதை பற்றி அம்மாக்கள் தங்களின் மகளிடம் பேசுவும் அல்லது அதை உணர்த்தும் விதமான செயலில் ஈடுபடவும் கூடாது.
- மகள் படிப்பு போன்று ஏதேனும் ஒரு விடயத்தில் குறைவாக இருந்தால், அதை பற்றி பேசுவது கூடாது. ஏனெனில் எதிர்காலத்தில் அவர் எந்த துறையில் சிறந்து விளங்குவார்கள் என்பது உங்களுக்கு தெரியாது அல்லவா?
- பெண்களுக்கு தியாகம் எனும் குணம் அவசியமாக இருக்கலாம். ஆனால் அனைத்து சூழ்நிலைகளிலும் இந்த குணத்தை செயல்படுத்துவது கடினம். எனவே மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து தனக்கு வேண்டியதை இழக்க கூடாது என்பதை சொல்லக் கூடாது.
- மகளின் திருமணத்தில் ஒவ்வொரு அம்மாவிற்கும் அதிக ஈடுபாடு இருக்கும். அந்த தருணத்தில், தங்களின் மகளுக்கு திருமணத்தில் ஆர்வம் வரும் வரை அமைதியாக இருக்க வேண்டும். அதற்காக தனது மகளிடம் தொந்தரவு செய்யக்கூடாது.
- பொது இடங்களில் அம்மாக்கள் தனது மகளை மற்றவர்கள் முன்பு திட்டக் கூடாது. ஏனெனில் மற்றவர்கள் முன் திட்டுவது அவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.