ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்ர் அல் பக்தாதி கொல்லப்பட்டமை உறுதியானால் முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாமின் காலத்தில் இராணுவ அதிகாரியாக பணியாற்றிய இருவரில் ஓருவர் ஐஎஸ் தலைமைப்பொறுப்பை ஏற்கலாம்.
பக்தாதிக்கு பின்னர் அவரின் இடத்தை நிரப்பக்கூடியவர் யார் என்பதை உறுதியாக சொல்லமுடியாத நிலையில் நிபுணர்கள் காணப்படும் அதேவேளை இயாட் அல் ஓபைடி அல்லது அல்லது அயட் அல் யுமைலி என்ற இருவரில் ஓருவர் தலைமைப்பொறுப்பை ஏற்கலாம் என தெரிவிக்கின்றனர்.
எனினும் இருவரும் முஸ்லீம்களின் ஓட்டுமொத்த தலைவர்(கலிபா) என்ற தகுதியை பெறப்போவதில்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஐம்பது வயதை கடந்துள்ள ஓபைடி ஐஎஸ் அமைப்பின் யுத்த அமைச்சராக பணியாற்றிவருகின்றார்.யுமைலி ஐஎஸ் அமைப்பின் அம்னியா பாதுகாப்பு அமைப்பின் தலைவராக காணப்படுகின்றார்- சில மாதங்களிற்கு முன்னர் இவர் இறந்துவிட்டதாக ஈராக் தொலைக்காட்சி தெரிவித்த போதிலும் இது உறுதிசெய்யப்படவில்லை.
இவர்கள் இருவரும் 2003 இல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த பின்னர் சுனி சலாபிஸ்ட் கிளர்ச்சியில் இணைந்துகொண்டனர்.
ஐஎஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் நெருங்கிய சகாவான அபு அலி அன்பாரி 2016 இல் விமான தாக்குதலில் கொல்லப்பட்டபின்னர் இவர்கள் இருவரும் பக்தாதியின் நெருங்கிய சகாக்களாக மாறியுள்ளனர்.
யுமாலி ஓபாடியை தன்னை விட மூத்தவர் என மதிப்பளிக்கின்றார் ஆனால் இவர்களில் யார் அடுத்த தலைமையை ஏற்பார்கள் என தெரியவில்லை சூழ்நிலையை பொறுத்து இவர்களில் ஓருவர் தலைமை பொறுப்பை ஏற்கலாம் என தெரிவிக்கின்றார் ஐஎஸ் விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்ற ஹிசாம் அல் ஹஸ்மி தெரிவிக்கின்றார்.
ஐஎஸ் தலைவர் பக்தாதி தனக்குதானே முஸ்லீம்களின் சிவில் மற்றும் மத தலைவர் என அறிவித்துக்கொண்டார்.ஆனால் இந்த இருவரும் அந்த நிலைக்கு செல்ல முடியாது ஏனெனில் இவர்கள் ஆழமான மத அறிவற்றவர்கள் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.