சுவை மிகுந்த அன்னாசிப் பழத்தில் பொட்டாசியம், கால்சியம் மாங்கனீஸ், தாது பொருட்கள் போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.
அன்னாசி பழத்தை எப்படி சாப்பிட வேண்டும்?
ஓரு அன்னாசிப் பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் 4 தேக்கரண்டி ஓமம் பொடியை போட்டு நன்றாக கலந்து, ஒரு டம்பர் அதில் தண்ணிர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதை இரவில் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் அன்னாசி பழத்தினை பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
இந்த முறையை 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறைவதில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
மற்றொரு முறை
மிளகு ரசம் செய்யும் போது, அதில் அன்னாசி பழத்தின் சில துண்டுகளை சேர்த்து சாப்பிட வேண்டும்.
பின் இந்த ரசத்தை தினமும் அல்லது வாரம் 4 நாட்கள் என்று ஒரு டம்ளர் ரசத்தை குடித்து வந்தால், ஒரே மாதத்தில் 2- 3 கிலோ வரை உடல் எடை குறையும்.
இதர நன்மைகள்
- அன்னாசிப் பழம் தினமும் ஒன்று சாப்பிடுவதால், நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பு கிடைக்கிறது.
- அன்னாசிப் பழம் சாப்பிடுவதால், அது பித்தக் கோளாறு போன்ற பிரச்சனைகளை விரைவில் குணமாக்குகிறது.
- அன்னாசியில் குறைவான கொழுப்புச்சத்தும் அதிகமான நார்ச்சத்தும் இருப்பதால், அது ஜீரணக் கோளாறு, உடலில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
குறிப்பு
அன்னாசிப் பழத்தை சந்தைகளில் இருந்து வாங்கிய உடனே புதிதாக சாப்பிட்டு விடுவது மிகவும் நல்லது.