ப்ரெக்ஸிட்டின் பின்னரும் பிரித்தானியாவினால் இலங்கைக்கு கிடைக்கும் அதிஸ்டம்

193

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதன் (Brexit) பின்னரும், பிரித்தானிய சந்தையில் இலங்கைக்கான வரிச்சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினால், இலங்கை பொருளாதார ரீதியில் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

ஏனெனில், இலங்கையில் இருந்து பெருந்தொகையான ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட பொருட்கள் பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதற்காக வழங்கப்படுகின்ற வரிச்சலுகை கிடைக்காவிட்டால், இலங்கையின் உற்பத்திகள் 10 சதவீத இலாப இழப்பை சந்திக்க நேரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதன் பின்னரும் இலங்கைக்கான வரிச்சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

SHARE