நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஸ்பெயின் நாட்டில் bungee jump நிகழ்வின் போது உயிரிழந்த சம்பவத்தில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 17 வயதான Vera Mol கடந்த 2015 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள Cantabria பகுதியில் உள்ள Cabezon de la Sal பாலத்தில் இருந்து bungee jump ல் ஏற்பட்டுள்ளார்.
இதில் பாதுகாப்பு கயிறுகளை இணைக்கும் முன்னர், பயிற்றுவிப்பாளரின் கட்டளையை கேட்டு அவர் குதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் Vera Mol பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில், பயிற்றுவிப்பாளரின் மோசமான ஆங்கில உச்சரிப்பே குறித்த விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. அவர் குதிக்க வேண்டாம் என ஆங்கிலத்தில் கூறியது இவருக்கு இப்போது குதியுங்கள் என தவறுதலாக கேட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டவரான அந்த பயிற்றுவிப்பாளரின் மிக மோசமான ஆங்கில உச்சரிப்பே இளம்பெண்ணின் உயிரைப் பறித்தது என தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், 18 வயது நிரம்பாத ஒரு நபரை எப்படி இந்த அபாயகரமான விளையாட்டுக்கு அனுமதித்தனர். எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
மட்டுமின்றி ஸ்பெயின் அதிகாரிகளின் உரிய அனுமதியின்றி குறித்த பாலத்தில் இந்த விளையாட்டை சட்டவிரோதமாக நடத்தப்பட்டிருப்பதாக நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தற்போது நீதிமன்ற விசாரணையில் இருக்கும் இந்த வழக்கில் குறித்த நபருக்கு கொலைக்குற்றத்திற்கான தண்டனை வழங்கப்படலாம் என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.