மூடநம்பிக்கை வலுத்து , விமான இயந்திரத்தினுள் நாணயங்களை ஒரு பயணி வீசியதால் , சீன விமானமொன்றின் பயணம் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன .
நாணயங்களை இப்படி வீசி பிரார்த்தித்த ஒரு 80வயது மூதாட்டியே இப்படி செய்துள்ளார் .
இந்த வேடிக்கையான சம்பவம் ஷாங்காய் விமான நிலையத்தில் செவ்வாயன்று இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பான ஒரு பயணத்துக்காக பிரார்த்தித்தேன் என்று , பொலிசாரிடம் தன் செய்கைக்கான விளக்கத்தை இந்தப் பாட்டி கொடுத்துள்ளார் .
ஒன்பது நாணயங்கள் இயந்திரத்தினுள் போடப்பட்டுள்ளன . இதில் ஒன்று சிக்கியதில் , அதை அகற்றாமல் விமானம் பறக்காது என்ற நிலையில் , 150பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் .
பல மணி நேர தாமதத்துக்குப் பின்பே , இந்தச் சீன விமானம் புறப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது