மிளகின் பக்கவிளைவுகள்: கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க

164

மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னவென்று தெரியுமா?

மிளகை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்?
  • உணவில் மிளகை அதிகமாக சேர்ப்பதால் வயிற்றில் எரிச்சல் ஏற்படுவதுடன், ஒருவித அசௌகரியத்தை சந்திக்க நேரிடும்.
  • கண் சிவப்பு, கண் அரிப்பு மற்றும் கண் எரிச்சல் போன்ற பல்வேறு கண் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.
  • மிளகினால் இரைப்பை மற்றும் உணவுக்குழாய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதுடன், நுரையீரல் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
  • பால் கொடுக்கும் தாய்மார்கள், மிளகை அதிகம் சேர்த்துக் கொள்வதால், பாலின் சுவை மாறுவதோடு, குழந்தைக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
  • சுவாச பிரச்சனை, தொண்டை எரிச்சல், ஆஸ்துமா போன்ற இதர சுவாச பிரச்சனைகளை உண்டாக்கும்.
  • வறட்சியான சருமம் உள்ளவர்கள், மிளகை அதிகம் சேர்த்துக் கொள்வதால், சரும வறட்சி அதிகரித்து, தோல் உரிதல் போன்ற பல சருமப் பிரச்சனைகள் ஏற்படும்.
  • கர்ப்பிணி பெண்கள் மிளகை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால், அசௌகரிய உணர்வுகள் ஏற்படுவதுடன், சில நேரத்தில் கருச்சிதைவைக் கூட ஏற்படுத்திவிடும்.
SHARE