G.M டயட்டை பின்பற்றுங்கள்: 7 நாட்களில் எடை குறையும்

241

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும் G.M டயட் முறையை சரியாக பின்பற்றி வந்தால் ஏழே நாட்களில் உடல் எடையில் ஒரு அற்புத மாற்றத்தைக் காணலாம்.

முதல் நாள்

முதல் நாளில் வெறும் பழங்கள் என்பதால், தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

ஆனால் வாழைப்பழம், லிச்சி, மாம்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களை மட்டும் சேர்க்கக் கூடாது.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாளில் காய்கறிகள் மட்டும் என்பதால், காலையில் வேக வைத்த ஒரு உருளைக்கிழங்கை 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட வேண்டும்.

அதன் பின் முட்டைக்கோஸ், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை சாலட் செய்தோ அல்லது காய்கறிகளை பச்சையாக அல்லது எண்ணெய் சேர்க்காமல் வேகவைத்த காய்கறிகளை சாப்பிடலாம்.

ஆனால் முக்கியமாக இந்த இரண்டாம் நாள் டயட்டில் ஒரு உருளைக்கிழங்கு மட்டும் தான் சாப்பிட வேண்டும்.

மூன்றாம் நாள்

மூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்து சாப்பிட வேண்டும். ஆனால் வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்கை மட்டும் சாப்பிடக் கூடாது.

நான்காம் நாள்

நான்காம் நாளில் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் சாப்பிட வேண்டும். எனவே 4 டம்ளர் பால் மற்றும் 6 வாழைப்பழங்களை சாப்பிடலாம்.

மேலும் தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் மற்றும் பூண்டு ஆகியவை சேர்ந்த சூப்பை குடிக்கலாம்.

ஐந்தாம் நாள்

ஐந்தாம் நாளில் முளைக்கட்டிய பயிர்கள், தக்காளி, பன்னீர் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

மேலும் சிக்கன் அல்லது மீல் மேக்கரை சேர்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, ஒரு கப் சூப் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

ஆறாம் நாள்

ஆறாம் நாளில் முளைக்கட்டிய பயிர்கள், காட்டேஜ் சீஸ், சிக்கன், மீல் மேக்கர் மற்றும் இதர காய்கறி வகைகளை சேர்த்து சாப்பிடலாம்.

ஆனால் தக்காளியை மட்டும் சேர்க்கக் கூடாது. சூப் கூட செய்து குடிக்கலாம்.

ஏழாம் நாள்

ஏழாம் நாளில் பழச்சாறுகள், ஒரு கப் சாதம் அல்லது பாதி ரொட்டி மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

G.M டயட்டின் நன்மைகள்?
  • 7 நாட்களில் 5-8 கிலோ உடல் எடை குறையும்.
  • வயிற்றுக் கொழுப்புகளை கரைத்து, தொப்பை குறையும்.
  • சருமம் பொலிவு பெறும்.
  • உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் சுத்தமாகும்.
SHARE