
பெண்களின் சிறுநீர் வெளியேறும் துவாரம், மலம் கழிக்கும் பகுதி, பிறப்புறுப்பின் வாய் என்று அனைத்து உறுப்புகளும் மிக அருகாமையில் அமைந்துள்ளது.
இந்த உறுப்புகளில் ஏதேனும் ஒன்றில் கிருமித் தொற்றுக்களின் பாதிப்புகள் ஏற்பட்டால், அது மற்ற உறுப்புகளையும் எளிதில் பாதிக்கும்.
சிறுநீர் பிரச்சனையின் அறிகுறிகள்?
- அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வுகள் தோன்றும்.
- சிறுநீரை வெளியேற்றும் போது எரிச்சல் மற்றும் வலி ஏற்படும்.
- அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும்.
சிறுநீர் பிரச்சனையை தடுப்பது எப்படி?
சிறுநீர் கழித்ததும் அந்தப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
மாதவிடாயின் போது பிறப்புறுப்புகளை தண்ணீர் கொண்டு முன் புறத்தில் இருந்து பின் புறமாக சுத்தமாக கழுவ வேண்டும்.
ஏனெனில் மற்ற உறுப்பு துவாரத்தில் உள்ள பாக்டீரியா கிருமிகள் சிறுநீர் கழிக்கும் துவாரத்தில் தங்கி தொற்றுக்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.
Stress Urinary Incontinence என்பது என்ன?
சிறுநீர் பாதையை சுற்றியிருக்கும் தசைகள் தளர்வடைவதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சனையினாலும் Stress Urinary Incontinence என்ற நோய் ஏற்படுகிறது.
இதனால் தும்மல், இருமல் மற்றும் சிரித்தலின் போதும், குனிந்து நிமிர்ந்து எடையை தூக்கும் போதும் சிறுநீர் கசிவுகள் ஏற்படும்.
இதுபோன்ற பிரச்சனைகள் சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றவர்கள், நரம்பியல் குறைபாடு உள்ளவர்கள், சிறுநீர் நோயாளிகள், தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் ஆகியோர்களை அதிகமாக பாதிக்கும்.