தளபதி விஜய் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவருக்கு பெண் ரசிகைகள் மிக அதிகம், ஏனெனில் பலரும் விஜய்யை தன் சொந்த அண்ணாவாகவே நினைக்கின்றனர்.
அந்த வகையில் சச்சின் படத்தின் படப்பிடிப்பின் போது இரவு 2 மணிக்கு விஜய்யை பார்க்க இரண்டு ரசிகைகள் வந்துள்ளனர்.
இயக்குனர் ஜான் மணி 2 ஆகிவிட்டது, சார் ரொம்ப சோர்வாக இருப்பார் என்று கூறியும், அவர்கள் ‘நாங்கள் அவருடைய தீவிரமான ரசிகைகள், எங்கள் நண்பர்கள் அனைவரும் விஜய் அண்ணாவை பார்த்ததாக கூறினார்கள்.
அதனால் தான் மருத்துவமனையிலிருந்து நேராக வருகிறோம், அவரிடம் நீங்கள் கூறுங்கள், விஜய் அண்ணா கண்டிப்பாக வருவார்’ என்று கூறியுள்ளார்.
உடனே ஜான், விஜய்யிடம் இதை கூற விஜய் 2 நிமிடத்தில் ரெடியாக வந்துவிட்டாராம், அவர்களிடம் ஏதோ சொந்த தங்கைகளிடம் பேசுவது போல் பேசினாராம். மேலும், முதலில் உடல்நலத்தை பாருங்கள், இந்த நேரத்தில் இப்படி வரக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பியுள்ளார்.
இந்த நிகழ்வை நான் என்றுமே மறக்க மாட்டேன் என ஜான் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.