
புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் மாணவி பள்ளிக்கூட நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பள்ளிக்கூட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்தவர் Alex Dallas (16), பதினோராம் வகுப்பு மாணவியான இவருக்கு 4 வயதிலிருந்தே புற்றுநோய் இருந்துள்ளது.
நோயிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருக்கும் Dallasக்கு கடந்த டிசம்பரில் 12 மணி நேர ஆப்ரேஷன் நடந்துள்ளது.
இந்நிலையில் மாணவி படிக்கும் பள்ளிக்கூடத்தில் நடன நிகழ்ச்சி விரைவில் நடைபெறவுள்ளது.
இதில், கலந்து கொள்ள ஆசைப்பட்டுள்ள Dallas, நிகழ்ச்சிக்கு அணிந்து செல்ல $680 விலையில் புது துணி வாங்கியுள்ளார்.
மேலும், தலைமுடியை அழகாக்கி அதற்கு தனியாக செலவு செய்துள்ளார்.
இந்நிலையில், பள்ளி நிர்வாகம் Dallas நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தடை விதித்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளி நிர்வாகம், Dallasன் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளோம்.
கடந்த ஆறு மாதங்களாக அவர் பள்ளிக்கு வரவில்லை. பள்ளிக்கூட நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி தினமும் ஒரு மணி நேரம் Dallasஐ பள்ளிக்கு வர சொன்னோம்.
ஆனால் அவர் வரவில்லை, அதனால் அவர் நிகழ்ச்சிக்கு வருவது சரியாக இருக்காது என கூறியுள்ளது.
பள்ளிக்கூடத்தின் முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள Dallasன் தாய் Sam Mattison, எல்லா பள்ளி மாணவ, மாணவியர்களை போல தன்னையும் நடத்த வேண்டும் என Dallas விரும்புகிறாள்.
ஆனால் அது அவருக்கு மறுக்கப்படுவதாக கூறியுள்ளார்.