மற்ற மொழியில் இருந்து நயன்தாராவுக்கு தேடிவரும் வாய்ப்பு- ஒப்புக் கொள்வாரா?

177

தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாரான ஒரு படத்தில் நயன்தாரா சீதா வேடத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருப்பார்.

தற்போது அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில் மற்றொரு கதாபாத்திரம் அவரை தேடி வந்திருக்கிறது.

அதாவது கன்னட சினிமாவில் குருஷேத்திரா என்ற பிரம்மாண்ட கதை தயாராகிறதாம். மகாபாரதத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த கதையை இயக்குனர் நாகண்ணா இயக்குகிறாராம். மேலும் படத்தில் துரியோதனன் கேரக்டரில் தர்ஷன், கர்ணன் கேரக்டரில் ரவிச்சந்திரன், பீஷ்மர் கேரக்டரில் அம்ரீஷ் நடித்து வருகின்றனர்.

இந்த பிரம்மாண்ட படத்தில் திரௌபதி வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் படக்குழு கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா விரைவில் இந்த படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.

SHARE