பாலிவுட்டில் நடந்த BiggBoss 9ல் பங்குபெற்றவர் நடிகை மன்டனா கரிமி. இவர் கௌரவ் என்ற தொழிலதிபரை இவ்வருடம் ஜனவரி மாதம் நீண்ட நாள் காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார்.
தற்போது தன்னுடைய கணவர் தன்னை துன்புறுத்தியதாக கூறி அந்தேரி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாகவும், மாமியார் மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். அதோடு நடிப்பை நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தவதாகவும் தெரிவித்துள்ளார்.
கணவரும், மாமியாரும் தன்னை கொடுமைப்படுத்தியதால் மாதம் ரூ. 10 லட்சம் தர வேண்டும் என்றும் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மேலும் ரூ. 2 கோடி தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதோடு தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து கிடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.