இந்த அறிகுறிகள் இருந்தால் பிரப்போஸ் பண்ணின நபர் சரி இல்லையாம்..?

203

காதல் வாழ்வை எந்த அளவிற்கு அழகாக்குமோ, அந்த அளவிற்கு ஆபத்தானதும் கூட. ரொம்ப பர்ஃபெக்ட்டான நபர்கள் கூட உங்களுக்கு சரியானவர்களாக இருக்கமாட்டார்கள்.

அதிலும் தவறான நபரின் காதல் வலையில் விழுந்துவிட்டீர்கள் என்றால்? நீங்கள் தவறான நபரை காதலிக்கிறீர்களா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு பக்கத்தில் இருந்து மட்டும் அன்பு, பாசம், அக்கறை செலுத்தப்படுகிறது என்றால் நீங்கள் தவறான நபரை காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் காதலன் அல்லது காதலியிடம் நீங்கள் நீங்களாக இல்லை என்றாலும் பிரச்னை தான். ஏதாவது நினைத்துக்கொள்வார்கள் என்று ஒரிஜினாலிட்டியை மறைக்கிறீர்கள் என்றால் தவறான நபரை தேர்ந்தெடுத்திருக்கீர்கள் என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் பார்ட்னர் உணர்வு பூர்வமாக நீங்கள் தேடும் போது உங்கள் அருகில் இல்லை, விலகி இருக்கிறார் என்றால் உங்களை அவர் காதலிக்கவில்லை.

இருவரும் காதலிக்கிறீர்கள் என்றாலும் எந்த வித ஈடுபாடும் இல்லாமல், அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் உறவில் இருக்கவே விரும்பவில்லை என்று அர்த்தம்.

நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பதில்லை. மிகவும் கஷ்டப்பட்டு கேட்கிறார்கள் என்றால் நீங்கள் முடிவு செய்துவிடலாம் அவர் உங்களுக்கு ஏற்றவர் இல்லை என்று.

இது எல்லாம் சரியாக இருந்தா நீங்க தவறான நபரின் காதல் வலையில் விழுந்துவிட்டீர்கள்.

SHARE