தினசரி உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்ளுங்கள்

230

தினசரி உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வதால் ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

இஞ்சியினால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்?
  • ரத்த அணுக்கள் உறைவதை தடுத்து, ரத்தோட்டத்தை சீராக்கி, ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் ரத்த அழுத்த பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • இரவில் அளவான உணவை சாப்பிட்டவுடன், சிறிதளவு இஞ்சி தேநீரைக் குடித்து வந்தால், விந்து அணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்க உதவுகிறது.
  • செரிமானக் கோளாறை தடுத்து செரிமானத்தை சீராக்கி வாயுத்தொல்லை பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • ஒற்றை தலைவலியை குணமாக்கி, ரத்த நாளங்களில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
  • புற்றுநோய் அணுக்களால் உடலில் ஏற்படும் திசுக்களின் சேதங்களை தடுப்பதுடன், அந்த அணுக்கள் உடலில் பரவுவதையும் தடுக்கிறது.
  • ஆஸ்துமா, சைனஸ் போன்ற நோய்களின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.
  • குளிக்கும் போது, இஞ்சியை சாறாக பிழிந்து, அதை எண்ணெயுடன் கலந்து வலி உள்ள இடங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இதனால் தசைப்பிடிப்பு, மூட்டு வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
  • இஞ்சி டீ குடித்தால் வாந்தி குமட்டல், ஜலதோஷம், சளித்தொல்லை மற்றும் தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்க உதவுகிறது.
  • அடிக்கடி இஞ்சி டீயை சேர்த்துக் கொள்வதால் சிறுநீரில் அதிகப்படியாக வெளியேறும் புரதத்தைக் கட்டுப்படுத்தி, சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
  • இஞ்சியானது நீரிழிவு நோயை குணப்படுத்த உதவுவதுடன், வலி நிவாரணிகள் மற்றும் உடல் வெப்பத்தை குறைக்கவும், கல்லீரலில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

SHARE