விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் தடையின்றி வீசா வழங்கும் விவகாரம் குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

490

news-2008-2-images-newsLTTE_Org_Chartவிடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் தடையின்றி வீசா வழங்கும் விவகாரம் குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் இருக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் அண்மைக்காலமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அவர்களுக்கு கனடா மற்றும் சுவிட்சர்லாந்துக்கான வீசா இலகுவாக கிடைப்பதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாக இன்றைய திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

புலனாய்வுப் பிரிவினரின் முறைப்பாட்டை அடுத்து அரசாங்கம் இதற்கெதிரான ராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மேலும் இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரும் தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் திவயின பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

SHARE