வார ராசிபலன்கள்….இந்த ரசிக்காரர்களெல்லாம் கவனமாக இருக்க வேண்டுமாம்..!

181

மேஷ ராசி 

நற்பலன்கள் குறைந்து காணப்படும் ,உடல் ஆரோக்கியம் குறையும், கவனமாக இருப்பது நலம் .

ரிஷப ராசி

நன்மை தீமை கலந்த வாரமாக இருக்கும், குடும்ப ஒற்றுமை காணப்படும், தொழில் மந்த நிலையில் இருக்கும். மிதுன ராசி சுபபலன்கள் அதிகரித்து காணப்படும், குடுப்பத்தில் குதூகலம் உண்டாகும் ,நினைத்த காரியம் நிறைவேறும், மகிழ்ச்சியான சூழல் நிலவும்

கடகராசி

நற்பலன்கள் குறைந்து காணப்படும்,குடும்பத்தில் ஒற்றுமை குறைவாக இருக்கும்,உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நன்மை தரும்.

சிம்மராசி

நற்பலன்கள் குறைந்து காணப்படும்.மனச்சஞ்சலம், வேலைப்பளு அதிகமாக இருக்கும் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும்.

கன்னி ராசி

நற்பலன்கள் குறைவாக இருந்தாலும், வருமானம் அதிகரிக்கும் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மகிழ்ச்சியான வாரமாகும்.

துலாம் ராசி

நன்மை தீமை கலந்த வாரமாக அமையும், நினைத்த காரியங்கள் தாமதமாக நிறைவேறும், உடல் ஆரோக்கியம் குறைவடையும்.

விருச்சிக ராசி

நற்பலன்கள் குறைந்து காணப்படும்,குடும்பம்பத்தில் அமைதி குறைவாக இருக்கும். வீண் செலவு அதிகரிக்கும் , எடுத்த காரியங்கள் தாமதமாகவே நிறைவேறும்.
தனுசு ராசி

நற்பலன்கள் குறைந்து காணப்படும், வீண் செலவு வீண் அலைச்சல் போன்றன ஏற்படும், கவனமாக இருப்பது நன்மை தரும்.

மகர ராசி

நற்பலன்கள் நடைபெறும், சுபகாரியங்கள் சுப செலவு ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றங்கள் ஏற்படும். கும்பராசி இந்தவாரம் நற்பலன்கள் உள்ள வாரமாக அமைந்தாலும் செலவுகள் அதிகரித்துக்காணப்படும், காரியத்தடை ஏற்படும்,விடாமுயச்சி வெற்றியை தரும்.

மீன ராசி

நன்மை தீமை கலந்த வாரமாக அமையும், தொழில் நன்றாக இருந்தாலும் செலவு அதிகரித்து காணப்படும், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நன்மையாகும்.

10ம் திகதி முதல் 16ம் திகதி வரையான எண்களுக்கான பலன்கள்

எண் 01

நற்பலன்களை அதிகரித்து காணப்படும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்,நினைத்த காரியங்கள் நிறைவேறும்,மகிழ்ச்சியான வாரம், பத்தாம் திகதி அதிஷ்டமான நாளாகும்.

எண் 02

நற்பலன்கள் அதிகமாக காணப்படும், சுபசெலவுகள் ஏற்படும்,உடல் ஆரோக்கியம் சிறிது பாதிப்படையும்,பதினாறாம் திகதி அதிஷ்டமான நாளாகும்.

எண் 03

நன்மை தீமை கலந்த வரமாகும்,வருமானம் சீராக இருந்தாலும் செலவு அதிகரித்து காணப்படும். உடல் சோர்வு ஏற்படும், பன்னிரெண்டாம் திகதி அதிஷ்டமான நாளாகும்.

எண்04

இந்தவாரம் நற்பலன்கள் இருந்தாலும் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படும். வீண் அலைச்சல் ஏற்படும். கறுப்பு நிற ஆடை அணிவதை தவித்து கொள்ளவும்.பத்தாம் திகதி அதிஷ்டமான நாளாகும்.

எண்05

நன்மை தீமை கலந்த வாரமாகும்.திடீர் பிரயாணங்கள் ஏற்படும்.காரியத்தடை உண்டாகும்.பொருளாதாரம் நன்றாக இருக்கும் பதின்நான்காம் திகதி அதிஷ்டமான நாளாகும்.

எண்06

இந்தவாரம் நற்பலன்கள் நடைபெற்றாலும்,திடீர் செலவுகள் ஏற்படும் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும்,குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் பதினைந்தாம் திகதி அதிஷ்டமான நாளாகும்.

எண்07

நன்மை தீமை கலந்த பலன்கள் காணப்படும். கொடுக்கல் வாங்கல் விடயங்களில் கவனமாக இருப்பது நலம்,உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, சிவப்பு நிற ஆடை அணிவதை தவிர்த்து கொள்ளவும். பதினைந்தாம் திகதி அதிஷ்டமான நாளாகும்.

எண் 08

சுப பலன்கள் குறைந்து காணப்படும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப லாபம் கிட்டும்,அவதானம் இருப்பது நன்மை தரும், பதினான்கு மற்றும் பதினைந்தாம் திகதி அதிஷ்டமான நாளாகும்.

எண்09

நற்பலன்கள் குறைந்து காணப்பட்டாலும் வருமானம் சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் குறையும் , மனசஞ்சலம் ஏற்படும்.பச்சை நிற ஆடை அணிவதை தவிர்த்து கொள்ளவும், பதினைந்தாம் திகதி அதிஷ்டமான நாளாகும்.

SHARE