காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் வெளிப்படுத்தலைக் கோரி பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு

196

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலைக் கோரி கிளிநொச்சியில் காணாமல் அவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பிரித்தானியா வாழ் இளைஞர்கள் பிரித்தானியா பிரதமருக்கு மனு ஒன்றை நேற்று சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த மனுவை இரட்னதுரை சோபிதன் தனது தகப்பனாரான வரதலிங்கம் இரட்ணதுரையையும் (புதுவை), திவாகர் சிறிபாஸ்கரன் தனது உறவினரான செல்லையா விஸ்வநாதனையும், குகராஜன் செல்வவிநாயகம் தனது உறவினரான இரங்கசாமி மகேந்திரராஜையும்,

வித்தியாவதி திவாகரன், கணவரான மகேஸ்வரன் திவாகரனையும், யோகராசா இரஞ்சிதனின் தந்தையான பேரம்பலம் யேகராசாவையும் மற்றும் இராயப்பு அமலதாஸ், தனது உறவினரான இராசு இரவீந்திரன் ( திருமாறன்) சார்பிலும் குறித்த மனுவை சமர்பித்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தகவல் அறியும் உரித்துடையவர்கள் தாம் என்ற பூரண விளக்கமடங்கியதாக குறித்த மனு அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE