20 ஆண்டுகளாக இருட்டறையில் நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட பெண்..

180

20 ஆண்டுகளாக நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட பெண்ணை காவல்துறையினர் மீட்ட சம்பவம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவின் கோவா மாநிலம் கேண்டலிம் பகுதியில், இந்த கொடுமையான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

50 வயதுடைய பெண் ஒருவர் நிர்வாண நிலையில், ஒரு வீட்டின் சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளார்.

இச்செய்தியை கேள்விப்பட்ட தன்னார்வ நிறுவனர்கள் சிலர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டனர்.

பின்னர், அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் அடைக்கப்பட்ட காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

அந்த பெண் அடைக்கப்பட்டு இருந்த அறையில் மின்சாரம் எதுவும் இல்லை. அது அந்த பெண்ணின் சகோதரர் வீடு என்று கூறப்படுகிறது.

கதவின் சிறிய துவாரம் வழியாக அந்த பெண்ணுக்கு உணவு அளிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த 20 வருடங்களாக அந்த பெண் அந்த இருட்டு அறையில் அடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

SHARE