சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் நடிகர் தனுஷின் 3 திரைப்படம் மூலமாக அறிமுகமாகி மெரினா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர் நீச்சல், காக்கிச்சட்டை போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கென்று பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட தனியானதோர் ரசிகர் வட்டம் உண்டாகியுள்ளது. இந்நிலையில், இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்பட இயக்குனரான பொன்ராம் இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் நடந்துவரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சமந்தா, அத்திரைப்படத்தில் நடிக்கும் தோற்றத்திலுள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.