விஜய்யின் முந்தைய படங்களில் நடித்தவர்கள் இப்போது பல பேட்டிகளில் அவருடனான தங்களது அனுபவத்தை பற்றி கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா தான் விஜய்யின் உதயா படத்தில் நடித்திருக்கிறேன் என்று கூறினால் யாரும் நம்பவில்லை. நான் அந்த படத்தில் உண்மையாகவே நடித்திருக்கிறேன் என்றார்.
அதோடு தான் இருவர் படத்திலும் நடித்துள்ளேன், முடிந்தால் கண்டுபிடியுங்கள். 1997ல் இருந்து 2001 வரை நிறைய படங்களில் தான் நடனம் ஆடி இருப்பதாக கூறியுள்ளார்.
நடிகர் கிருஷ்ணா நடித்திருக்கும் பண்டிகை படம் நாளை (ஜுலை 14) வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.