ரஷ்ய ஜனாதிபதியின் புதிய காதலி இவரா? வெளியான புதிய தகவல்

209

ரஷ்ய ஜனாதிபதியின் காருக்குள் இருந்த சிவப்பு உடை அணிந்த பெண்மணி தான் அவரது புதிய காதலியா என அங்குள்ள செய்தி ஊடகங்கள் விவாதத்தில் மூழ்கியுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அரசியல் பரபரப்பில் இருந்து விடுபட்டு நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள அவருக்கு பிரியமான கடற்கரை விடுதி ஒன்றில் விடுமுறையை கழித்து வருகிறார்.

இந்த நிலையில் தமது கருப்பு வண்ண மெர்சிடஸ் காரில் அப்பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு தாமே வாகனத்தை செலுத்தி சென்றுள்ளார்.

இதில் வாகனத்தின் முன் இருக்கையில் இருந்து வெளியே வந்த ரஷ்ய ஜனாதிபதி புடின் பின்பக்க கதவினை திறக்க முயற்சிக்க, அதில் சிவப்பு வண்ண உடை அணிந்து அல்லது சிவப்பு கைப்பையுடன் ஒருவர் அமர்ந்திருந்துள்ளார்.

புடின் வாகனத்தின் கதவினை திறக்க முயற்சிக்க, ஆனால் அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் கதவினை மூடச் சொல்லியுள்ளார்.

இது செய்தி ஊடகங்களின் பார்வையில் சிக்க, தற்போது புடினின் புதிய காதலி அவரா என்ற விவாதம் எழுந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தமது மனைவி Lyudmila Putina வை விவாகரத்து செய்த பின்னர் மறுமணம் செய்துகொள்ளாமலே இருந்து வந்துள்ளார் புடின்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்ய ஒலிம்பிக் தங்க மங்கை 34 வயதாகும் Alina Kabaeva உடன் உறவில் இருப்பதாகவும், இந்த தம்பதியினருக்கு குழந்தைகளும்

இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என இதுவரை எந்த ஊடகங்களும் செய்தி வெளியிட்டதில்லை.

தற்போது கருப்பு வண்ண மெர்சிடஸ் காருக்குள் இருந்த பெண்மணி புடினின் புதிய காதலியா என்ற விவாதத்தை ரஷ்ய செய்தி ஊடகங்கள் எழுப்பியுள்ளன.

ஆனால் அந்த பெண்மணி ஜனாதிபதியின் பாதுகாப்பு உறுப்பினர்களில் ஒருவர் என ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் Dmitry Peskov தெரிவித்துள்ளார்.

SHARE