வீட்டு வாடகை கொடுக்காத பிரபல நடிகர்- போலீசிடம் சென்ற பிரச்சனை

186

பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் வாராஸ்தாரா என்ற கன்னட தொலைக்காட்சி தொடரை தயாரித்து வருகிறார். இந்த தொடருக்காக படக்குழு சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

ஆனால் அந்த வீட்டின் வாடகையை கொடுக்கவில்லை என்று உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வீட்டு உரிமையாளர் தீபக் கூறியதாவது, என் வீட்டில் 3 மாதம் ஷுட்டிங் நடக்க, நாள் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வாடகை பேசப்பட்டது. ஆனால் அவர்கள் ஒரு பாதியை மட்டும் கொடுத்துவிட்டு மீதியை பாக்கி வைத்தனர்.

வீட்டை சுற்றியுள்ள விவசாய நிலத்தையும் நாசப்படுத்தியுள்ளனர். இதற்கு இழப்பீடு கேட்டதற்கு கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

SHARE