கனடா பிரதமரை சந்தித்த குழந்தை அகதி ஜஸ்டின் ட்ரூடோ

251

சிரியா அகதிகளின் மகனான, குழந்தை ஜஸ்டின் ட்ரூடோவை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துள்ளார்.

தங்களுக்கு தஞ்சம் அளித்த நாட்டிற்கு நன்றி சொல்லும் வகையில், சிரியா அகதி தம்பதியர் தங்கள் குழந்தைக்கு ஜஸ்டின் ட்ரூடோ என்று பிரதமரின் பெயரை சூட்டியுள்ளனர்.

பிறந்து இரண்டு மாதமே ஆகியுள்ள இந்த ஆண் குழந்தையின் முழு பெயர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதம் பிலான் ஆகும்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கனடிய பிரதமர் இந்த குழந்தையை தூக்கி வைத்திருந்தார்.

சிரியாவில் நடைபெறும் போரினால் குழந்தையின் பெற்றோர் கனடாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த ஆண் குழந்தை கால்காரியில் கடந்த மே மாதம்தான் பிறந்துள்ளது.

 

SHARE