தைவான் நாட்டில் மனைவி அனுப்பிய குறுஞ்செய்திகளை கண்டுகொள்ளாத கணவனை விவாகரத்து செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தைவானில் 50 வயதை தாண்டிய லின் என்ற பெண்மணிக்கு அங்குள்ள நீதிமன்றம் குறித்த விவகாரத்தில் விவாகரத்து வழங்கியுள்ளது.
சம்பவத்தின் போது லின் என்பவருக்கு வாகன விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரத்தை தனது கணவனுக்கு அவர் மொபைல் வழியாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
ஆனால் அந்த கணவர் செய்தியை வாசித்த பின்னரும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை எனவும் இக்கட்டான நிலையில் ஆதரவளிக்காத கணவருடன் சேர்ந்து வாழ்வது துயரமானது எனவும் லின் நீதிமான்றத்தில் தெரிவித்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி காவு, குறித்த தம்பதிகளின் திருமணம் சரிசெய்ய முடியாத வகையில் சேதமடைந்திருப்பதாகவும், லின் விரும்பினால் திருமண முறிவு பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மட்டுமல்ல, குறித்த நபர் விபத்தில் சிக்கிய மனைவியின் நிலை என்ன என்பதை விசாரிப்பதற்கு பதில் கூடவே சென்றிருந்த நாய் என்னானது என வருத்தமுடன் விசாரித்திருப்பது இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது என லின்னின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.