நாஜிகளின் வதை முகாமில் இளவரசர் வில்லியம் தம்பதியினர்

263

உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பில் சுவிஸ் நாட்டில் மாயமான தம்பதிகள் சடலமாக மீட்பு மற்றும் நாஜிகளின் வதை முகாமில் சென்று பார்வையிட்ட இளவரசர் வில்லியம் தம்பதியினர்.

பிரான்சின் கலே பிராந்தியத்தில் இருந்து தனியார் விமானம் ஒன்றின் மூலம் சட்டவிரோதக்குடியேறிகளை பிரித்தானியாவுக்குள் கொண்டுசெல்ல எடுக்கபட்ட முயற்சி பிரெஞ்சுக்காவல்துறையால் முறியடிக்கபட்டுள்ளது.

பிரான்சிலிருந்து வான் மார்க்கமாக சட்ட விரோதக் குடியேறிகளை பிரித்தானியாவுக்குள் கொண்டுசெல்ல எடுக்கபட்ட முதலாவது முயற்சி இதுவாகும்.

அல்ப்ஸ் மலைப்பிராந்தியத்தில் 75 வருடங்களுக்கு முன்னர் காணாமல்போன தம்பதியினரின் சடலங்கள் உறைபனிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஏழு பிள்ளைகளைக்கொண்ட இந்த தம்பதியினர் 1942 ஆம் ஆண்டில் தமது பசுமாடுகளை தொழுவத்தில் அடைப்பதற்காக வெளியே சென்ற பின்னர் காணமல் போயினர்.

இந்தநிலையில் தற்போதைய வெப்பம் காரணமாக அந்தப்பிராந்தியத்தில் இருந்த அடந்தபனிஉருகியதால் இவர்களின் உடலங்கள் வெளியே புலப்பட்டபின்னர் மீட்கப்பட்டன.

போலந்தில் தற்போது தங்கியுள்ள இளவரசர் வில்லியம் தம்பதியினர் இன்று நாசிகளின் முன்னாள் வதைமுகாமுக்கு சென்று பார்வையிட்டதுடன் நாசிகளின் கொலைக்களத்தில் இருந்து தப்பிய ஐவரையும் சந்தித்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போர்க்காலத்தில் நாசிகளால் நடத்தபட்ட இந்தமுகாமில் சுமார் 65,000 பேர் படுகொலையுண்டனர்.

லிபியாவிலிருந்து மத்தியதரைக்கடல் ஊடாக சட்டவிரோதக்குடியேறிகள் பிளாஸ்ரிக படகுகளில் அதிகளவில் பயணித்து வருவதால் லிபியாவுக்குரிய பிளாஸ்ரிக்படகுகள் விற்பனையை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்துள்ளது.

ஆயினும் லிபியாவுக்கு பிளாஸ்ரிக்படகுகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு சட்டபூர்வமாக செயற்படும் என்பதில் இதுவரை தெளிவான விபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் வில்லார் மற்றும் அவரது மகன் கோர்பா உட்பட்ட விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய சிலர் காவற்துறையினால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஊழல் முறைகேட்டு விசாரணைகளுக்காக இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்;பட்டுள்ளது.

ஸ்பெயினின்; முன்னாள் கால்பந்துவீரரான வி;ல்லார் தற்போது ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக பதவிவகிக்கின்றார்.

SHARE