பெண்களை கவரும் தாடி உங்களிடம் இல்லையா..? இதோ தாடி வளர்க்க இத படிங்க..!

218

பெண்களுக்கு பொதுவாக தாடி வச்ச பசங்கள ரொம்ப பிடிக்கும். பசங்க வச்சுருக்க அந்த தாடிக்காகவே சில பொண்ணுக அவங்கள லவ் பண்ணுவாங்க. ஏன் தாடி வச்ச பசங்கள பொண்ணுகளுக்கு பிடிச்சுருக்கு அப்படிங்கறதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு.

அவங்க தான் மேன்லியா ஸ்டைலா இருப்பாங்க. தாடி வச்ச பசங்க மேல ஒரு தனி ஈர்ப்பு இருக்கும். ஆனா ஒரு சிலருக்கு தாடி வச்சுக்க பிடிக்காது. ஏன்னா, அத பராமரிக்கறது ரொம்ப சிரமம். தாடி வைக்கறது பெருசு இல்ல. அத சரியா பராமரிக்கனும். அது தான் முக்கியம்.

ஆலிவ் ஆயிலை உங்களது தாடிக்கு பயன்படுத்துவதால், அது மிருதுவாகிறது. ஆலிவ் ஆயிலில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகளும், இயற்கை மாய்சுரைசரும் தாடியை மிருதுவாக்குகிறது. ஆலிவ் ஆயிலை சிறிதளவு எடுத்துக்கொண்டு, அதை சூடுபடுத்தி, மிதமான சூட்டில் இருக்கும் போது தாடியில் தடவி நன்றாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டுவிட்டு காலையில் மிதமான சூடுள்ள நீரில் கழுவி விடவேண்டும்.

கற்றாளை ஜெல்லை தடவினால் தாடி மிகவும் மிருதுவாக மாறும். தாடியில் பொடுகு தொல்லையும் இருக்காது. சிறிதளவு கற்றாளை ஜெல்லை தாடியில் நன்றாக மசாஜ் செய்து மிதமான சூடுள்ள தண்ணீரில் கழுவுங்கள். இதை தினமும் இரண்டு முறை செய்வதால், உங்களது தாடி மிருதுவாக மாறி விடும்.

ஷாம்புவை தலைக்கு மட்டும் இல்லாமல் உங்களது தாடிக்கும் சேர்த்து பயன்படுத்துங்கள். தினமும் இரண்டு முறை சிறிதளவு ஷாம்பை எடுத்து தாடிக்கு மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

தாடிக்கு கண்டிஸ்னர் பயன்படுத்துவது ஒரு மிகச்சிறந்த வழியாகும். சிறிதளவு கண்டிஸ்னரை இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் உடன் கலந்து தாடிக்கு 5 நிமிடங்கள் மசாஜ் செய்து பின்னர் கழுவி விட வேண்டும். இதனால் தாடி மினுமினுப்பாக இருக்கும்.

வீட்டிலேயே செய்யக்கூடிய இவை உங்களது தாடியை மிருதுவாகவும், வேகமாகவும் வளர வைக்க உதவும். இதனால் நீங்கள் சிறந்த பலன்களை பெற முடியும். தாடியை வளர்ப்பதற்கு அதிக பராமரிப்பு தேவை. இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

SHARE