
இலங்கை டெஸ்ட் அணித்தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட தினேஷ் சந்திமால் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சந்திமால் கடந்த இரண்டு தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் பாதிப்பு காரணமாக சந்திமால் இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.
சந்திமால் அணிக்கு திரும்பும் வரை ரங்கன ஹேரத் இலங்கை டெஸ்ட் அணித்தலைவராக செயல்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேத்யூஸ் பதவி விலகியதை அடுத்து டெஸ்ட் அணித்தலைவராக நியமிக்கப்பட்ட சந்திமால், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தொடரை கைப்பற்றி அசத்தினார் என்பது நினைவுகூறத்தக்கது.