கல்முனையில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

257

முஸ்லிம் பெண்கள் ஆராச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த செயலமர்வு கல்முனை வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது.

இதில், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரி எம்.எஸ்.அமீன் குஷைன் கலந்து கொண்டு ஊடகங்களில் செய்திகளை அறிக்கையிடும் போது கவனிக்க வேண்டியவை தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் இந்த செயலமர்வில் பங்குபற்றியதோடு தங்களது கருத்துக்களையும் முன்வைத்தனர்.

மேலும், இன்று சமூக மாற்றத்திற்கு ஊடகத்துறையின் பங்களிப்பின் முக்கியத்துவம், நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு விடயங்களையும் மக்கள் அறிந்து கொள்ள ஊடகங்கள் வழங்கும் பங்களிப்பு தொடர்பில் ஆராயப்பட்டன.

அவ்வப்போது நாட்டிலே பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் வன்முறைகளும், துஸ்பிரயோகங்களும் இடம்பெற்றுக் கொண்டுதான் வருகின்றது.

இதனை மக்கள் ஊடகங்கள் வாயிலாகவேதான் அறிகின்றார்கள். எனவே ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் பெண்களை பாதிக்காத வகையில், திரிபுப்படுத்தப்படாத வகையில் செய்திகளை வெளியிடுவது காலத்தின் கட்டாயம்.

அத்தோடு அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. அதனை சரியான முறையில் கையாள்வதன் மூலம் பெண்களுக்கான உரிமையினை சரியான முறையில் பேண வேண்டும் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

 

 

 

SHARE