பாடசாலை கணனி உதிரிப் பாகங்களை திருடி பழைய மாணவர்கள் கைது

256

பொகவந்தலாவை கம்பியன் தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபரின் உத்தியோகபூர்வ அறையில் காணப்பட்ட கணனி உதிரிப் பாகங்கள் களவாடப்பட்டுள்ளன.

அதே பாடசாலையில் கல்வி கற்ற ஐந்து மாணவர்கள் இந்த சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கணனி உதிரிப் பாகங்களை களவாடியமை மற்றும் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை பாடசாலை அதிபர் இந்த மாணவர்கள் மீது சுமத்தியுள்ளார்.

இந்த முறைப்பாட்டை தொடர்ந்து ஹட்டன் பொலிஸ் மோப்ப நாய் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் போது, பாடசாலைக்கு அருகாமையில் உள்ள பழைய மாணவர்கள் இதனுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் குற்றச் செயலுடன் தொடர்புடையவர்கள் என உறுதி செய்யப்பட்டால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE