வேதாளம் படத்தில் அஜித் நடிப்போடு ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றது அனிருத்தின் இசை. அப்படத்தில் வந்த ஆலுமா டோலுமா பாடல் சிறு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
அனிருத் அண்மையில் ஒரு பேட்டியில், அஜித் பற்றி பேசியுள்ளார். அப்போது வேதாளம் படப்பிடிப்பின் போது என்னுடன் வினய் என்ற உதவியாளர் வந்தார். அஜித் அவர்கள் வந்ததும் என்னை விசாரித்துவிட்டு, வினய் வணக்கம், நான் அஜித்குமார் என்று கூறிவிட்டு சாப்பிட அவருக்கு வழங்க உத்தரவிட்டார்.
முதல் சந்திப்பிலேயே அஜித் அப்படி நடந்துக் கொண்டது வினய்யை ஆச்சரியப்படுத்திவிட்டது. அதில் இருந்து வினய் அஜித் ரசிகராக மாறிவிட்டார் என்றார்.