பரிசு மழையில் இந்திய அணி

162

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு வழங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது.

இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், ‘போட்டியில் தான் தோற்றீர்கள், ஆனால் எங்கள் இதயத்தை வென்றுவிட்டீர்கள்’ என்று ரசிகர்கள் மத்தியில் அணிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.

வருகின்ற புதன்கிழமை அன்று இந்திய அணி தாயகம் திரும்புகிறது. இந்த நிலையில் குறித்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதமாக மகளிர் அணிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க பி.சி.சி.ஐ முடிவுசெய்துள்ளது.

வீராங்கனைகள் அனைவரின் நேரத்திற்கு ஏற்றபடி இந்த வரவேற்பு விருந்திற்கான திகதி முடிவு செய்யப்பட இருக்கிறது.

மேலும் முத்தாய்ப்பாக, பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல், ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா 50 லட்சம், அணியில் பணி புரிந்தவர்களுக்கு தலா 25 லட்சம் என பிசிசிஐ பலே திட்டம் போட்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE