ஐசிசியின் உலகக் கிண்ணத் தொடருக்கான கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்களுக்கான 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.
தொடர் முடிந்த பின்னர் சிறந்த வீரர்களை கொண்ட கனவு அணியை ஐசிசி அறிவிக்கும்.
இதன்படி 2017ம் ஆண்டுக்கான கனவு அணியில் மிதாலி ராஜ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணிவிபரம்
- மிதாலி ராஜ் (இந்தியா, அணித்தலைவர்) 409 ஓட்டங்கள்,
- லாரா வல்வார்த் (இங்கிலாந்து)- 324 ஓட்டங்கள்,
- டாம்சின் பியுமான்ட் (இங்கிலாந்து) 410 ஓட்டங்கள்,
- எலிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) 404 ஓட்டங்கள் மற்றும் 9 விக்கெட்டுக்கள்,
- சாரா டெய்லர் (இங்கிலாந்து, விக்கெட் கீப்பர்) 396 ஓட்டங்கள்,
- ஹர்மன்ப்ரீத் கவுர் (இந்தியா) – 359 ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட்டுக்கள்,
- தீப்தி ஷர்மா (இந்தியா) – 216 ஓட்டங்கள் மற்றும் 12 விக்கெட்டுக்கள்,
- மரிஸேன் காப் (தென்ஆப்பிரிக்கா) – 13 விக்கெட்டுக்கள்,
- டேன் வான் நிகெர்க் (தென்ஆப்பிரிக்கா) – 99 ஓட்டங்கள் மற்றும் 15 விக்கெட்டுக்கள்,
- அன்யா ஸ்ரப்சோல் (இங்கிலாந்து) – 12 விக்கெட்டுக்கள்,
- அலெக்ஸ் ஹார்ட்லி (இங்கிலாந்து) – 10 விக்கெட்டுக்கள்.
- நடாலி ஸ்சிவர் (இங்கிலாந்து) – 369 ஓட்டங்கள் மற்றும் 7 விக்கெட்டுக்கள்.