விளையாட்டுக் கழகத்திற்கு மின்விளக்குகள் வழங்கிவைப்பு – அமைச்சர் பா.டெனிஸ்வரன்

147

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேசத்தில் அடம்பன் பாலைக்குளி டிலாசால் விளையாட்டுக்கழகம் தமது உதைபந்தாட்ட அணியின் பயிற்சியினை மேம்படுத்தும் முகமாக இரவு நேரப்பயிற்ச்சினை மேற்கொள்வதற்காக வலுக்கூடிய மின்விளக்குகளினை கொள்வனவு செய்து தருமாறு வடக்கு மாகாண போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களிடம் கோரியிருந்தனர், அதனை கருத்திலெடுத்த அமைச்சர் கிராமத்தின் விளையாட்டு வீரர்களும், கழகமும் வளர்க்கப்படவேண்டும் என்ற நோக்கோடு தனது 2017 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை (CBG ) நிதியில் இருந்து ரூபாய் 30,000 நிதியை ஒதுக்கி குறித்த கழகத்திற்கு தேவையான வலுக்கூடிய மின்விளக்குகள் ஐந்து (05) கொள்வனவு செய்து குறித்த கழகத்தின் தலைவர் பி.நிலாளனிடம் கையளிக்கும் நிகழ்வு 24-07-2017 திங்கள்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த மின்விளக்குகள் வழங்கும் நிகழ்வின்போது வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, வர்த்தக வாணிபம் மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஈ.சுரேந்திரன் அவர்களும் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

SHARE