மீள் குடியேற்ற மக்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ் கடற்பாசி வளர்ப்பினை ஊக்குவிக்கும் செயற்பாடு

244

வடமாகணத்தில் கடந்த காலங்களில் மீனவ சங்கங்களின் வளர்ச்சியினை மேம்படுத்தும் முகமாக வழங்கப்பட்ட உதவித்திட்டங்களின் தொடர்சியாக இந்த வருடமும் மீனவ சங்கங்களுக்கு உதவித்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மீன்பிடி அமைச்சின் கீழ் இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அதிகாரசபையின் (NAQDA) மேற்பார்வையில் கடற்பாசி வளர்ப்புதிட்ட சிறப்பு பயிற்சி வழங்கப்பட்ட மீன்பிடி சங்கங்களுக்கு, குறித்த திட்டங்கள் செயர்ப்படுத்தக்கூடிய பிரதேசங்கள் அடையாளங்காணப்பட்டு, கடற்பாசி வளர்ப்பினை ஊக்குவிக்கும் முகமாக மீள் குடியேற்ற மக்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ் கடற்பாசி வளர்பிற்கான உபகரணங்கள் வழங்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் மாகாண ரீதியில் குறித்த திட்டத்திற்கு மொத்தமாக 5.5 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு யாழ் மாவட்டத்திற்கு 1.5 மில்லியன் பெறுமதியான உபகரணங்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 0.4 மில்லியன் பெறுமதியிலும், மன்னார் மாவட்டத்திற்கு 3.6 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அதில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீனவ சங்கங்களுக்கு 0.6 மில்லியன் பெறுமதியிலும், நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீனவ சங்கங்களுக்கு 1.4 மில்லியன் பெறுமதியிலும், முசலி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீனவ சங்கங்களுக்கு 1.6 மில்லியன் பெறுமதியிலும், இரும்பு வளையங்கள், நங்கூரங்கள், மிதவைகள், HDPE வலைகள், தனியிழை வலைகள் போன்ற உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு எதிர்வரும் தினங்களில் வழங்கிவைக்கப்படவுள்ளன.

மன்னார் மாவட்ட சங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வானது வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சரின் உப அலுவலகத்தில் 25/07/2017 நண்பகல் 1.00 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மீன்பிடி அமைச்சர் கௌரவ பா.டெனிஸ்வரன் அவர்களும், மீன்பிடி அமைச்சின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஈ.சுரேந்திரன் அவர்களும், கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் அவர்களும், இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அதிகாரசபையின் (NAQDA) வடமாகாண பிரதிப்பணிப்பாளர் திரு.பா.நிருபராஜ் அவர்களும், மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

SHARE