இளஞ்செழியனை இலக்கு வைத்த துப்பாக்கிச்சூடு! சரணடைந்தவருக்கு விளக்கமறியல்

238

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் சரணடைந்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் சதீஸ்கரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

யாழ். நீதிவான் சதீஸ்கரனின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் குறித்த நபரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரதான சந்தேகநபரை பொலிஸார் தீவிரமான தேடி வந்த நிலையில், இன்று காலை பிரதான சந்தேகநபர் யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

39 வயதான விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சிவராசா ஜயந்தன் என்ற நபரே குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராவார்.

சரணடைந்த ஜயந்தனிடம் விசாரணைகளை மேற்கொண்ட யாழ். பொலிஸார், இறுதியில் நீதிவான் சதீஸ்கரனின் வாசஸ்தலத்தில் அவரை முன்னிலைப்படுத்தி இருந்தனர்.

இதன்போது அவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை மாலை நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் மற்றையவர் தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE