
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா – துறையடி தக்கியத்துன் நூர் பள்ளிவாசலை புனரமைப்பதற்காக 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சால் யுத்த காலத்தில் சேதமடைந்த மத ஸ்தலங்களுக்கு நஷ்ட ஈடு வழங்குகின்ற வேலைத்திட்டத்திற்கு அமைய குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக இரண்டரை லட்சம் ரூபாவிற்கான காசோலை இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால், கிண்ணியா – துறையடி தக்கியத்துன் நூர் பள்ளிவாசல் தலைவர் ஏ.ஜி.எம்.ஜிஹாதிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் வைத்து இன்று மேற்படி நிதி கையளிக்கப்பட்டுள்ளதுடன், இதில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.