அஜீத்தின் ஆசை பட நாயகியின் தற்போதைய நிலை…

226

தல அஜித்தின் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளிவந்த ஆசை படத்தில் அறிமுகமானவர் சுவலட்சுமி. கொல்கத்தா ரசகுல்லா போன்று இருந்த இவர் தொடர்ந்து கோகுலத்தில் சீதை, விஜயுடன் லவ் டுடே பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

பின்னர் கடந்த 2002ல் ஸ்வாகாடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். அதோடு கணவரோடு கலிபோர்னியாவில் செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின்பு படவாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஆனால் எந்த பட வாய்ப்புகளையும் ஏற்கவில்லை.

கடந்த 2008ம் ஆண்டு வெளிவந்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் கூட இயக்குனர் ராஜா நடிகை சுவலட்சுமியை நடிக்க வைக்க எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை.

இப்போதும் பட வாய்ப்புகள் வந்தாலும் அதனை ஏற்காமல் கணவருக்கு தொழிலில் உதவியாக இருந்து வருகிறார்.

SHARE