வட மாகாண சபையிலிருந்து வெளியேறிய உறுப்பினர்

202

வட மாகாண சபை உறுப்பினர் செ.மயூரனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அவர் சபையிலிருந்து வெளியேறியுள்ளார்.

வட மாகாண சபையின் 100வது அமர்வு இன்றைய தினம் வட மாகாண சபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.

தமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பாக சுழற்சி முறை ஆசனத்தில் வட மாகாண சபை உறுப்பினராக கடந்த வருடம் மயூரன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்ததால், வட மாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய உறுப்பினர்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்து சபையில் இருந்து வெளியேறியுள்ளார்.

குறித்த சுழற்சி முறை ஆசனத்தில் எதிர்வரும் ஒரு வருடத்திற்கு யாழ். வணிகர் கழக தலைவர் ஆர்.ஜெய்சேகரம் தமிழரசு கட்சி சார்பாக நியமிக்கப்படலாம் என இலங்கை தமிழரசு கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE