8 ஆண்டுகளாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு வட மாகாண சபையின் 100வது அமர்வில் தீர்வு

206

 

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கான வெளிச்ச வீடொன்றை அமைக்குமாறு கடந்த 8 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த போதிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையின் 100வது அமர்வு இன்றைய தினம் வட மாகாண சபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.

இதன்போது, மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்படி விடயம் தொடர்பான பிரேரணையை சபையில் முன்மொழிந்ததுடன், குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்படி பிரேரணையை முன்மொழிந்து து.ரவிகரன் உரையாற்றுகையில்,

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் முன்னைய காலத்தில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்று இரவு வேளைகளில் வெளிச்ச வீட்டின் துணையுடன் கரை திரும்புவார்கள்.

எனினும் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அந்த வெளிச்ச வீடு சேதமடைந்துள்ள நிலையில் போருக்கு பின்னராக கடந்த 8 வருடங்களாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தமது அமைப்புக்கள் ஊடாக பல தடவைகள், பலரிடம் வெளிச்ச வீட்டை அமைத்து கொடுக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், இது வரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.

சுமார் 73 கிலோ மீற்றர் நீளமான முல்லைத்தீவு மாவட்ட கரையோரத்தில் வாழ்கின்ற சுமார் 5,000ற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் வெளிச்ச வீடு இல்லாமையினால் பாதிக்கப்படுகின்றார்கள்.

குறிப்பாக மீனவர்கள் திசை மாறிச் செல்கின்ற பல சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE