வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் தொடர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

227

தேசிய ரீதியியாக பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் பல்வேறு பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் காலை 7 மணிமுதல் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் ஒன்றிணைந்து டெங்கு ஒழிப்பு சிரமதானத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த சிரமதானத்தின்போது 200 இற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு பாடசாலை வளாகத்தினைச் சுற்றி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணிகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

அத்தோடு வட பகுதி பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான பரீட்சை இடம்பெற்றுவருகின்ற நிலையில் இந்த தொடர் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாவது மாணவர்கள் சிரமத்தை எதிர்நோக்கும் வகையில் அமைந்திருப்பதாக பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

 

 

 

SHARE