இலங்கையிலிருந்து பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்களை கடத்திச் செல்ல முற்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்களை கடத்திச் முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து ஒரு கோடியே 35 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்படடுள்ளது.
சுவிஸ் பிராங்க், யூரோ மற்றும் நோர்வே க்ரோனர் தொகை ஒன்று அதற்குள் உள்ளடங்குவதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர் அந்த பணத்தொகையை சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதற்கு முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட விமான நிலைய சுங்க பிரிவு குறித்த பணத்தை பறிமுதல் செய்துள்ளதாகவும், 3 இலட்ச அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.