ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக பயணிப்போருக்கு எச்சரிக்கை!

198

உலகின் சிறந்த 10 விமான சேவை நிறுவனங்களில், ஸ்ரீலங்கன் எயார்லைன் விமான சேவையும் ஒன்றாகும்.

எனினும் இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவை தரமற்ற விமான சேவையாக தற்போது மாற்றமடைந்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கு தரமற்ற உணவுகள் வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விமான சேவையின் போது, புறக்கோட்டையிலுள்ள வீதிக்கடைகளின் உணவுகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆட்சியின் போது மஹிந்தவின் மைத்துனரினால் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பாரிய நட்டம் ஏற்படுத்தப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் புதிய நிர்வாகம் ஏற்படுத்தப்பட்ட போதிலும் அந்த நிறுவனம் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றமடையவில்லை.

இந்த நிலையில் அண்மையில் ஸ்ரீலங்கன் விமான சேவையில் பயணித்த பயணி ஒருவருக்கு தரம் குறைவான உணவு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தின் விமான சேவை நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உணவு புகைப்படத்துடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வாழைப்பழம், பனிஸ் என்பன தலா ஒவ்வொன்றும், இஞ்சி தேனீர் ஒரு கோப்பை மற்றும் ஒரு தேக்கரண்டி சீனி வழங்கப்பட்டுள்ளது.

SHARE